சென்னை, ஜூலை 11: வணிகவரித்துறை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.  சிந்தாதறிப்பேட்டை பழைய பங்களா தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 45). இவர், அதேபகுதியில் கடை அமர்த்தி பீடி, சிகரெட் மொத்த வியாபாரம் செய்துவருகிறார்.

இவரது கடைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வந்த நபர் ஒருவர், தான் ஒரு வணிகவரி அதிகாரி என்று கூறி, வரிஏய்ப்பு செய்துவிட்டதாக மிரட்டி ரூ.10,000 பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, நுங்கம்பாக்கம் வணிகவரி அலுவலகத்தில் சென்று சிவலிங்கம் விசாரித்தபோதுதான், சிவலிங்கத்திற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு அந்த நபர் மீண்டும் கடைக்கு வந்து ஏமாற்றமுயன்றுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த சிவலிங்கம் அந்த நபரை போலீசில் ஒப்படைத்துவிட்டார்.  சிந்தாதறிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரிக்கையில், கீழ்ப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த பழனிவேல் (வயது 46) என்பது தெரியவந்தது.