திருச்சி, ஜூலை 11: திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 40 லட்சம்மதிப்புள் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக பெண்கள் உட்பட 4பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, கேரளா உள்பட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தடைந்தது.

அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் 259 கிராம் தங்கத்தை தனது கைப்பையில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல, மலேசியாவில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது மலேசியாவை சேர்ந்த சரஸ்வதி வீரப்பன் என்ற பெண் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் அணிந்து மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரும் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லம் என்பவர் தனது பேண்ட் டிக்கெட் பாக்கெட் மற்றும் ஆசன வாயில் 678 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது அஸ்லாம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் மதிப்பு ரூபாய் 23 லட்சம் ஆகும். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4பேரை கைது செய்து அவர்களிமிருந்து மொத்தம் ரூ.40 லட்சம்மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல்செய்தனர்.