சரத், சசி நடிக்கும் நா நா பர்ஸ்ட் லுக்

சினிமா

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் நா நா படத்தை என்.வி.நிர்மல்குமார் இயக்குகிறார். இதில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்திலும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் சாகச பொழுதுபோக்கு படமான உருவாகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

ஜூன் 6-ம் தேதி முதல் மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த மும்பை மாநகரத்தின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கி இருக்கிறோம் என்றார். படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதி செய்ய, ஆனந்த் மணி கலை அமைக்கிறார்.