கடாரம் கொண்டான் படத்திற்கு யு/ஏ சான்று

சினிமா

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்ஷராஹாசன், நாசர் மகன் அபிஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’. இப்படத்தை ராஜேஷ் எல். செல்வா இயக்கி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி 3 மில்லியனுக்கு அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கமலகாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது விக்ரம் மிகச்சிறந்த நடிகன் என்றும் இந்த படத்திற்கு பிறகு சியான் விக்ரம் என்பதற்கு பதில் கே கே விக்ரம் என்று அழைக்கப்படுவார் என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விக்ரம், கமலின் இந்த பாராட்டு எனக்கு 10 தேசிய விருது கிடைத்தது போல் உள்ளது. எதிர்காலத்தில் கமல் இயக்கத்தில் என்னை நடிக்க அழைத்தால் உடனே தயாராகி விடுவேன். இவ்வாறு விக்ரம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படம் தணிக்கை குழுவிற்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்று வழங்கி உள்ளனர். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.