பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் வி1. இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ரப்ஹெல் இசை அமைத்துள்ளார். இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாவெல் நவகீதன் இயக்கியுள்ளார். இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

விரையில் வெளியாகவுள்ள “வி1” படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.
கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. வி1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது.

அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “வி1” படத்தின் கதை.