பர்மிங்காம், ஜூலை 11:  இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் முதல் 6 ஓவர்களிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை பறிக்கொடுத்து, ஆஸ்திரேலியா அணி திணறிவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி பர்மிங்காமில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. எதிரும் புதிருமான இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி முதல் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, தொடக்கவீரரும், கேப்டனுமான ஆரோன் பின்ச் டக் அவுட் ஆகி நடையை கட்டினார். அதிரடி வீரர் வார்னர் 9 ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். ஹேண்ட்ஸ்கோம்ப்பும் 4 ரன்களில் வெளியேற, முதல் 6 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய பேட்டிங்கின் டாப் ஆர்டர் மளமளவென சரிந்தது.