சென்னை, ஜூலை 12:  பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகாரின்பேரில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடிவருகின்றனர்.

திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரம் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபல குரு தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியபோது, அங்குள்ள 2 அறைகளில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
இதனையடுத்து, நங்கநல்லூரை சேர்ந்த கார்த்திக் (வயது 32), மதுரை சரவணன் (வயது 31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஹோட்டல் மேனேஜர் வில்சன்ராஜ், ஊழியர்கள் சதீஷ், அருண் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆந்திரா, மேற்குவங்கம், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.