சென்னை, ஜூலை 12:  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மளிகை கடை காரரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

அம்பத்தூர் அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 30). அதே பகுதியில் மளிகை கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு நேற்று வந்த டிப்-டாப் ஆசாமி ஒருவர், ரூ. 50,000 பணம் தந்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை ரிப்பன் மாளிகைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனை நம்பி அவருடன் சென்ற பிரதீப்பை, அலுவலக வளாகத்திலேயே அமர வைத்துவிட்டு, பணி ஆணை வாங்கிவந்து தருகிறேன், அதுவரை இங்கேயே அமருங்கள் என்று கூறிவிட்டு, அந்த ஆசாமி தப்பிச்சென்றுள்ளார்.

இதுதொடர்பாக பிரதீப் அளித்த புகாரின்பேரில், பெரியமேடு போலீசார் வழக்குப்பதிந்து டிப்-டாப் ஆசாமியை தேடிவருகின்றனர்.