‘அம்பத்தூர் வரை மெட்ரோ ரெயில் விட வேண்டும்’

சென்னை

சென்னை. ஜூலை 12: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை அம்பத்தூர் வரை விரிவுப்படுத்த வேண்டும் என்று அலெக்சாண்டர் வலியுறுத்தி உள்ளார்..
தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு அம்பத்தூர் தொகுதி உறுப்பினர் வி.அலெக்சாண்டர் பேசியதாவது:- மெட்ரோ ரெயில் வசதி அம்பத்தூர் பகுதி மக்களுக்கும் கிடைக்கும் படியாக அதை விரிவு படுத்தவேண்டும்.

அம்பத்தூர் மண்டலம் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பிறகு வீட்டு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதை குறைக்க வேண்டும்.
அம்பத்தூர் ஏரி 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதை தூர்வாரி குடிநீர் ஆதாரமாக மாற்றித்தர கேட்டுக்கொள்கிறேன். பாடி மேம்பாலத்தில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலையாக அமைத்து தரவேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.