லண்டன், ஜூலை 13: விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் முன்னேறினார். விம்பிள்டனை பொறுத்தவரை இவர் 12 முறை பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் விளையாடப்படும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றும் பாரம்பரிய பெருமை மிக்கதானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆண்கள் ஒற்றையசர் அரையிறுதி போட்டியில் டென்னிஸ் ஜாம்பவான்களான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடாலை எதிர்கொண்டார். செம்மண் ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக்கூடிய நடால் முன்னதாக பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

எனினும் கிராஸ் கோர்ட் எனப்படும் புல்வெளி மைதானத்தில் சிறந்த வீரரான பெடரர் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். 7-6, 1-6, 6-3, 6-4 என 3-1 என்ற நிலையில் பெடரரை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், விம்பிள்டன் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு பெடரர் 12-வது முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். மேலும் 2003 – 2007, 2009, 2012, 2017 ஆண்டுகளில் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச்சுடன் மோத உள்ளார்.