டோக்கியோ, ஜூலை 13: ஜப்பான் நாட்டின் கியூஷு என்ற தீவில் இன்று காலை 6,1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரத்தில் நேஜ் என்ற பகுதியில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீ. தொலைவிலும் 237.7 கி.மீ. ஆழத்திலும் மையம் ª£ண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனினும் நிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் ஆகியவற்றை பற்றிய உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.