பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் டாலர் அபராதம்

உலகம்

வாஷிங்டன், ஜூலை 13: பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது. சர்வதேச அளவில் தகவல்கள் பகிர்வதில் பெரும் பங்கை வகிக்கிறது பேஸ்புக் எனப்படும் முகநூல்.

சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது அமெரிக்காவின் மத்திய விசாரணை கமிஷன் விதிக்கும் அதிகபட்ச தொகை இது என உறுதி செய்யப்பட்டுள்ளது.