புதுவையில் படிக்க தமிழக மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை

புதுவை, ஜூலை 13: புதுவை மாநில பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 50% இடங்களை நிரப்புவதற்கு கால அவகாசம் உள்ளதால், தமிழக மாணவர்கள் இந்த கல்லூரிகளில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கல்வி அமைச்சர் கமலகண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து, புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அரங்கில் அமைச்சர் கமலக்கண்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 6 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது.

தற்போது அங்கு 1,512 இடங்கள் உள்ளன. இதில், இதுவரைக்கும் 721 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மீதம் 790 இடங்கள் காலியாக உள்ளது. இந்த பாலிடெக்னிக் பகுதிகளில் நானும் கல்வித் துறையைச் சேர்ந்தவரும் சென்று ஆய்வு செய்தும் மிக சிறப்பாக உள்ளது மீதம் 50% இடங்கள் காலியாக உள்ளன.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அரசு சார்பில் செலவழிக்கப்படுகிறது.பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை வாய்ப்பு சுலபமாக கிடைக்கிறது.

புதுவை பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் டெக்னிகல் கட்டுப்பாட்டின்கீழ் தான் செயல்படுகிறது. புதுச்சேரியில் பாலிடெக்னிக்கில் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு ஜூலை 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

இதனை இந்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்க உள்ளோம். காலியாக உள்ள இடங்களுக்கு புதுவை மாநிலத்தை சுற்றிலும் உள்ள தமிழக மாணவர்கள் படிக்கும் விருப்பம் இருந்தால் உடனடியாக நேரடியாக பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு வந்து நேரடியாக விண்ணப்பித்து உடனடியாக மாணவ சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

இருக்கும் 102 இடங்களில், 17 இடங்களில் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கை நடந்து உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 48 பேர் பாலிடெக்னிக்கில் இணைந்துள்ளார்கள். மீதம் 50 சதவீத காலியிடங்கள் உள்ளது.

இதனால் தனியார் கல்லூரிகளில் சென்று படித்தால் அதிக செலவாகும் புதுச்சேரி அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்தால் மிக குறைந்த செலவுதான் ஆகும் என்பதால் மாணவர்கள் புதுவை பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.