சிதம்பரம் அண்ணாமலையில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு

தமிழ்நாடு

சிகாகோ, ஜூலை 13: 11-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு விரைவில் சிதம்பர அண்ணாமலை பல்கலைக்கழக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் கடந்த 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் அறிஞர்கள் தமிழ் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

மாநாட்டின் முடிவு விரைவில் அடுத்த 11ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி இளங்கோ தெரிவித்துள்ளார்,