சென்னை, ஜூலை 13: ஓட்டேரியில் உள்ள பலசரக்கு குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டேரியில் உள்ள ஒரு பலசரக்கு கடையின் குடோனிற்கு, வேன் மூலம் போதை பொருட்கள் வந்து இறங்குவதாக தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய ஆய்வில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக, கடை உரிமையாளர் மாரீஸ்வரன் (வயது 30). ஊழியர்கள் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சோலை ராஜதுரை. சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போதைப் பொருட்களை, பெங்களூருவில் இருந்து வாங்கிவந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.