சென்னை, ஜூலை 13: சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் வினி வர்மா (வயது 23). இவர், ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் பணிமுடிந்து கே.கே. சாலையில் செல்போன் பேசியபடியே நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், வினியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடி உள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சில மணிநேரங்களிலேயே தப்பியோடிய மர்மநபரை கண்டறிந்து செல்போனை மீட்டனர். விசாரணையில், அந்த நபர் மணிவண்ணன் (வயது 22) என்பது தெரியவந்தது.