சூர்யா நடிப்பில் வந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இப்படத்தைத் தொடர்ந்து அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் குறைவான படங்களில் மட்டும் நடித்துள்ள சமீரா, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு பிரபல தொழிலதிபரான அக்ஷய் வர்தே என்பவரை மகாராஷ்டிரா முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 2ஆவது முறையாக கர்ப்பமாக உள்ளார். தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமீரா,
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வந்தார்.

தனக்கு தானே ஹோட்டல் வச்ச ஒரே ஆளு நம்ம புரோட்டா மாஸ்டர் சூரி தான்! இவ்வளவு, ஏன், தண்ணீருக்குள் அடியில் மிதந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது இவருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தப் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.