அனைத்து துறையிலும் தமிழகம் முன்னேற்றம்

சென்னை

சென்னை, ஜூலை 14: தமிழகம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்று இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.  சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது; இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது; உலக நாடுகளுடன் பார்க்கும் பொழுது 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இன்று தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. கலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் வரலாறு என்று அனைத்திலும் தமிழ்நாடு தனிச்சிறப்பு கொண்டது.

தமிழக மக்களின் நிலமும் மனமும் செழிப்பாக உள்ளது. எம்ஜிஆர் முதல் ரஜினி, ஜெ., முதல் கருணாநிதி வரை சினிமா என்றாலும், விவசாயத்திலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது. கலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் வரலாறு என்று அனைத்திலும் தனிச்சிறப்பு கொண்டது.

தமிழ்நாடு. உலகம் முன்னேறிச்செல்லும் வேகத்திற்கு ஏற்ப நாமும் முன்னேறிச்செல்லவேண்டும். நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும், தமிழகம் சுகாதாரத்துறையிலும் முன்னேறி உள்ளது.

மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், மக்களின் தேவையறிந்து அரசு செயல்பட வேண்டும்,’’. தமிழகத்தின் சுகாதார சதவீதம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது பெருமைபடக்கூடிய விஷயம். ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு . இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் சுகாதாரத்துறையில் மூன்றாவதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது வழிகாட்டுதலில் சிறந்து விளங்கிய சுகாதாரத்துறை தற்போது அதே பாதையில் பயணிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறைந்த முதலமைச்சரின் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று பேசினார்.

மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் மருத்துவத்துறையில் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் தனது உரையில் தெரிவித்தார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.