காத்மாண்டு, ஜூலை 14: நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலியாகினர்.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது. வெள்ளம் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 24 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.