அமிர்தசரஸ், ஜூலை 14: காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாபில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் மோதல் இருந்து வந்தது. கடந்த மாதம் சித்துவிடம் இருந்த சுற்றுலா, கலாச்சார இலாகாவை அம்ரிந்தர் சிங் பறித்துவிட்டு புதுப்பிக்கப் பட்ட எரிசக்தி துறையை வழங்கினார்.

இதனால் அதிருப்தி அடைந்த அவர் புதிய இலாகா பொறுப்பை ஏற்க மறுத்து வந்தார். இந்நிலையில் மே 10-ந் தேதியே அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பி விட்டதாக இன்று டுவிட்டரில் சித்து செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.