3-வது மாடியில் இருந்து விழுந்த டிரைவர் பலி

சென்னை

சென்னை, ஜூலை 14: வடபழனியில் 3 வது மாடியில் இருந்து கார் ஓட்டுனர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி( வயது 28). இவர் வடபழனி பெரியார் பாதையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி சொந்தமாக கார் வைத்து அதை டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டி வந்தார்.

நேற்று இரவு பணி முடிந்த பின் அவர் தங்கி இருக்கும் கட்டிடத்தின் 3 வது தளத்தில் உள்ள மொட்டமாடியில் படுத்து தூங்கியதா கூறப்படுகிறது. தூக்கத்தில் இருந்து எழுந்த அவர் நிலை தடுமாறி 3 வதுமாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவர் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோதுபோது அவர் படுகாயமடைந்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்து மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும்போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மது போதையில் விழுந்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து வட பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.