ஸ்ரீநகர், ஜூலை 14: போதைப்பொருள் வைத்திருந்த போலீஸ்காரர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர், முஷ்டாக் அகமது பீர். ஆயுதப்படை போலீசில் பணியாற்றினார்.

இந்நிலையில், குப்வாரா மாவட்டம், ஹண்ட்வாரா பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டத்தில், அதில், 750 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது தெரிந்தது.

அதை கைப்பற்றிய போலீசார், காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர், முஷ்டாக அகமது பீர் என தெரிந்தது, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.