புதுக்கோட்டை, ஜூலை 14: திருமயம் அருகே, பிஜேபியின் வெளிநாடு பிரிவு மாவட்ட தலைவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். திருமயம் அருகே நம்பூரணிப்பட்டியில் உள்ளது, பிஜேபி பிரமுகர் நடராஜனின் வீடு. நேற்று இரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

நடராஜன் அளித்த புகாரின் பேரில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவரது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அந்த தெருவில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.