வேலூர், ஜூலை 14: வரும் 16ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முரளிதர சுவாமிகள் ஆசியுடன புவனேஸ்வரி ஹோமம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், பல ஆண்டுகளாக உள்ள குலதெய்வ குறைபாடுகள் நீங்கவும் ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் வேண்டியும், மனக்குறை போகவும், சாபங்கள், தோஷங்கள் அகலவும் 16-ந் தேதி பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமமும், புத்திர பாக்ய யாகமும், திருமண பிராப்தி வேண்டி திருமண ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீசாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும். ஸ்ரீ மாதா புவனேஸ்வரி மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள். அத்தகைய புவனேஸ்வரி தேவியை வணங்கி நடைபெறும் யாகமே ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம் ஆகும்.

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி : அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஸ்ரீ சக்ர நாயகியாகவும், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாகவும் விளங்குகிறாள். இவள் வேதங்கள் போற்றும் வேத மாதாவாகவும், அனைத்துலகையும் ஈன்று, எல்லா உயிரினங்களுக்கும் தாயாக விளங்குபவள், மாபெரும் சக்தி படைத்து ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி புரிந்து, நம்மை அரவணைக்கும் அன்னையே ஸ்ரீ மாதா புவனேஸ்வரியாகும்.

இவளே அனைத்திற்கும் காரண காரணியாகயிருந்து வழி நடத்தி வருகிறாள் என்று தன்வந்திரி பீடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம் தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.