வேலூர் ஜூலை 14: ஆகஸ்ட் 5-ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள வேலூர் தொகுதியில் ரூ.27 லட்சம் சிக்கியுள்ளது.  வேலூர் அலமேலு மங்காபுரம் அடுத்த புதுவசூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). ரியல் எஸ்டேட் செய்து வருகிறார்.

தி.மு.க. பிரமுகரான வசூர் நடராஜனின் சகோதரர் ஆவார். ஏழுமலையும் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் ஏழுமலை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வெளியில் வீசப்பட்ட பையில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகிறார்கள்.