மதுரை, ஜூலை 14: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கத்தை தொழிலாளர்கள் கண்டனர். அதேபோல, குடிநீர் குழாய்க்காக மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் தோண்டியபோது பழங்கால சிறைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டன.

தமிழ்நாடு தொல்பொருள் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சுரங்கப்பாதையானது மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், கூடலழகர் கோவிலுக்கும் இடையிலான பாதையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.