விழுப்புரம், ஜூலை 14: கல்வராயன்மலையில் நடைபெற்ற கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் 1897 பயானாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைஅமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர். கல்வராயன்மலையில் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து நடத்தும் இரண்டு நாட்கள் நடைபெறும் கோடை விழா நேற்று துவங்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் வரவேற்புரையாற்றி விழாவை துவக்கி வைத்தார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் அவர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, கோடை விழாவில் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை தொடங்கி வைத்து, இப்பகுதியில் வசிக்கம் மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இவ்விழாவில், சமூக நலத்துறை சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.12,25,000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 31 பயனாளி களுக்கு ரூ.25,00,000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், வனத்துறையின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ14,10,000/- மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- கடனுதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை சாடர்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.42,950/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளி களுக்கு ரூ.2,70,761/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவு வங்கியின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25,94,626/- கடனுதவியினையும், தோட்டக் கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,99,030/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், வருவாய்த்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.36,000/- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 1897 பயனாளிகளுக்கு ரூ.1,08,71,867/- மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கல்வராயன் மலைப்பகுதியை முன்னேற்றுவதற்கு தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அனைத்து மலை ஸ்தலங்களிலும் கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

இவ்விழாவில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.  பொ.கௌதமசிகாமணி, உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், மண்டல வன அலுவலர் ரானேஷ்குமார் ஜகினியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.