புதிய தலைவராக டாக்டர் நவீன் சவுத்திரி தேர்வு

சென்னை

சென்னை, ஜூலை 14: ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாட்டிக் கிளப்பின் புதிய தலைவராக டாக்டர் நவீன் சவுத்திரி தேர்ந் தெடுக்கப்பட்டார். ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாட்டிக் 2019-20-ஆம் ஆண்டுக்கான தலைவராக மருத்துவர் நவீன் சவுத்திரியை தேர்வு செய்துள்ளது.

அவரிடம் முறையாக தலைமைப் பொறுப்பை வழங்குவதற்கான நிகழ்வுடன், இச்சங்கத்தின் நிர்வாகக் குழு பதவியேற்கும் விழாவும் சேவா சமாஜம் குழந்தைகள் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு கலந்து கொண்டார்.

தற்போது தலைவராகப் பொறுப்பேற்கும் மருத்துவர் நவீன் சவுத்திரி “ஸ்வரம் மருத்துவமனை”யின் தலைமை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரோடு, துணைத்தலைவராக பர்மீந்தர் சிங் ஆனந்த் பொறுப்பு ஏற்றார். அதோடு, இருதயராஜ் செயலாளராகவும், ஜித்தீஷ் பர்மர் பொருளாளராகவும் பதவியேற்க, மற்ற இயக்குனர்களும் தத்தமது பொறுப்புகளை ஏற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற புதிய தலைவர் நவீன் சவுத்ரி, வரும் ஆண்டில் தாங்கள் செய்ய இருக்கும் சமூகப் பணிகள் என, பல்வேறு திட்டங்களை அறிவித்தார். புதிய கோணத்தில் யோசித்து, வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டதாக அந்த திட்டங்கள் அமைந்திருந்ததோடு, திட்டத்தின் பெயர்களும் சம்மந்தப்பட்ட பணியுடன் தொடர்புள்ள செந்தமிழ் பெயர்களைச் சுமந்திருந்தது பலரது பாராட்டைப் பெற்றது.