சென்னை, ஜூலை 15: தமிழில் அஞ்சலகத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. ஆளும்கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திக்கு இடம் இல்லையென்றும், மத்திய அரசிடம் வலியுறுத்தி இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் உறுதியளித்தார். தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு பேசுகையில்: தபால் துறைக்கான போட்டி தேர்வு தமிழில் நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்தது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மாற்றம் செய்து பிஜேபி அரசு பொறுப்பேற்று ஜூலை 11-ம் தேதி மாநில மொழிகளில் இடம் பெறாது என அறிவித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள் அஞ்சல் துறை பணியில் சேரக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேடாக தமிழில் தேர்ச்சி பெற்றுள்ள குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பிஜேபி அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழகத்தின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. மீண்டும் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டனம் தெரிவித்தும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தபால் கிராமிய ஊழியர்கள் பதவி உயர்வுக்கான தேர்வினை மத்திய அரசு சென்னை, கோவை ,திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டது. அஞ்சல் துறை தேர்வானது ஏற்கனவே ஆங்கிலம் இந்தி பிராந்திய மொழியில் நடத்தப்பட்டு வந்தது. பகுதி 1 தேர்வானது 100 மதிப்பெண்களுக்கானது ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது.

பகுதி 2-ல் 50 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழ் மொழியிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது தமிழகம் மட்டுமில்லாது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றதுள்ளது. தமிழகம் இருமொழி கொள்கையில் தொடர்ந்து கைபிடிக்கும், இந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்று கொள்ளது. மத்திய அரசுக்கு அஞ்சல்துறை தேர்வினை பிராந்திய மொழியில் நடத்த வேண்டும் நாடாளுமன்றத்தில் நீங்களும், நாங்களும் குரல் எழுப்புவோம்.

அப்போது குறுக்கிட்ட திமுக எதிர்கட்சி தலைவர் துரைமுருகன்: நாங்களும், நீங்களும் ஒரு மித்த கருத்தை கொண்டுள்ளோம்., மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவிட்டாலும், வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்: நாடாளுமன்றம் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு, 38 உறுப்பினர்கள் நீங்களும் குரல் எழுப்புங்கள், நாங்களும் ராஜ்யசபாவில் குரல் எழுப்பிகிறோம்.

துரைமுருகன் : பேரவையில் 234 பேர் இருக்கிறோம். தீர்மானம் கொண்டு வர வேண்டியது தானே. முதல்வருக்கு தீர்மானம் கொண்டு வருவதில் விருப்பம் உள்ளது தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய துரைமுருகன், அரசின் கொள்கையை ஏற்று கொள்கிறோம். நமக்குள் இருக்கின்ற ஒற்றுமையை தீர்மானமாக கொண்டு வருவதில் என்ன குடியாய் முழ்கி போய்விடும். இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர வேண்டும். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தபால்துறை தேர்வு தமிழில் நடத்த வேண்டும் என்பது அரசின் நிலையாக உள்ளது. நாளைக்கு நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பபடும், அங்கு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் இங்கு முடிவு எடுப்போம்.

துரைமுருகன்: நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, இங்கு முடிவு எடுக்கப்படும் என கூறுகிறீர்கள். அங்கு பிரச்னையை கிளப்பியவுடன் அவையை ஓத்திவைத்துவிடுவார்கள். அப்போது குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றத்தில் எழுப்பபடும் பிரச்னையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினோம். நாங்கள் 37 எம்பிக்கள் இருந்த போது எங்களை பார்த்து என்ன செய்து விட்டீர்கள் என கேள்வி எழுப்பினீர்கள். மக்கள் பிரச்னையை தீர்க்க உங்களுக்கு வாக்களித்து உள்ளார்கள்.

தற்போது நீங்கள் 37 எம்பிக்கள் உள்ளீர்கள் நீங்கள் நாடாளுமன்ற குரல் எழுப்பு மக்கள் பிரச்னை தீர்வு காணுங்கள். உங்களுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிறாதே அதே நிலைப்பாடு தான் நாங்களும் இந்த விவகாரத்தில் உள்ளோம். திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதற்காக ஏதாவது காரணத்தை தேடினார்கள். இந்த காரணத்தை வைத்து வெளிநடப்பு செய்யவார்கள். துரைமுருகன்: இருவருக்கும் உணர்வுபூர்வமான பிரச்னை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தலைமை தாங்கி நடத்தினேன் என்பதால் எனக்குள் கொதித்து கொண்டு இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மத்தியில் உள்ள அரசு இதற்கு உத்தரவு போட்டுள்ளது. அங்கு வலியுறுத்தியும் தான் முடிவு காணமுடியும்.
துரைமுருகன்: எங்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் கூறியதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இவ்வாறாக சட்டபேரவையில் அதிமுக, திமுக இடையே கடும் வாதம் நடைபெற்றது.