காஞ்சிபுரம், ஜூலை 15: 15-ம் நாளாள இன்று ஆதி அத்திவரதருக்கு நீலம் மற்றும் பச்சை, நிற அரக்கு பார்டர் பட்டு அணிவிக்கப்பட்டுள்ளதுடன், அதிக வாசனை மிகுந்த நித்தியமல்லி, மரிக்கொழுந்து, செண்பகம், சம்பங்கி, மற்றும் பெருமாளுக்கு உகந்த ஏலக்காயால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

இன்றும் கூட்டம் அதிகரித்துள்ளதால் வழி நெடுக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தொண்டு நிறுவத்தைச்சேர்ந்தவர்கள் அவர்கள் நிற்கும் இருப்பிடத்திற்கே சென்று பானகம் வழங்கி வருகின்றனர். காஞ்சியில் 15-ம் நாளான இன்று ஆதி அத்திவரதருக்கு நீலம் மற்றும் பச்சை நிற அரக்கு பார்டர் பட்டு அணிவிக்கப் பட்டுள்ளதுடன் தலையில் மரிக்கொழுந்து மற்றும் தாமரை மலர்கள் சூடப்பட்டு, அதிக வாசனை மிகுந்த நித்தியமல்லி, மரிக்கொழுந்து, செண்பகம், சம்பங்கி, மற்றும் பெருமாளுக்கு உகந்த ஏலக்காயால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் முழுவதும் செண்பகம், மல்லியுடன் கலந்து சிகப்பு நிற பூக்கள் மற்றும் பச்சை நிற தவணத்தால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலைகளும், தாமரை மொட்டு மாலைகளும் அத்திவரதரின் கழுத்தை அலங்கரிக்கின்றன. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் இசைக்க நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் வழி நெடுகிலும் உள்ள பக்தர்களுக்கு பானகம், மற்றும் புளியோதரை, வெண் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம்போன்ற பிரசாதங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.மேலும் நீண்ட வரிசையில் நின்ற விஐபிகளும் காத்திருந்து எந்தவித சிரமமுன்றி சாமி தரிசனம் செய்தனர். வழி நெடுக உள்ள பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா.. நாராயணா.. என்ற கோஷம் பக்தி கோஷம் எழுப்பியவாறு ஆதி அத்திவரதனை தரிசனம்செய்தனர்.