மும்பை போலீசில் அதிருப்தி எம்எல்ஏக்கள் புகார்

இந்தியா

மும்பை, ஜூலை 15: காங். தலைவர்களை சந்திக்க விருப்பம் இல்லை என்று மும்பை காவல்துறைக்கு கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மும்பையில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே உள்பட சிலர் வரலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று மும்பை காவல்துறைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாங்கள் அச்சுறுத்தப்படலாம் எனவும் அக்கடிதத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.