சென்னை, ஜூலை 15: அமமுக மாநில அமைப்பு செயலாளரான ஞானசேகரன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். காங்கிரசைச் சேர்ந்த ஞானசேகரன், மூப்பனார் தமாகாவை ஆரம்பித்த போது அதில் சேர்ந்தார். பின்னர் ஜி.கே.வாசனுடன் காங்கிரசில் இணைந்த அவர், வாசன் மீண்டும் தமாகாவை ஆரம்பித்த போது ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார்.

தினகரன¢ தனிக்கட்சி ஆரம்பித்த போது, அமமுகவில் சேர்ந்த அவர் அமைப்பு செயலாளராக இருந்தார். தற்போது அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சேர்ந்துள்ளார். வேலூர் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஞானசேகரன்.