அதுல்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெய்

சினிமா

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் இயக்கும் மற்றொரு படத்திற்காக ஜெய் மற்றும் அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில், வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். அடுத்தடுத்து படங்களில் நடிகை அதுல்யா உடன் நடிகர் ஜெய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.