பாலிவுட் இயக்குனர் ஆஸாத் இயக்கும் தமிழ் படம்

சினிமா

பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம்.

சமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த படத்தை தயாரித்த பாம்பே டாக்கீஸ் நிறுவனம் தமிழில் பல்வேறு ஜாம்பவான்கள் நடித்த படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் ராஜ்யவீரன் படத்தை இயக்குனர் ஆஸாத் இயக்க உள்ளார்.

தமிழில் இவர் இயக்கம் முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆஸாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்ஷய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி,ஜாகிர் ஹுசைன்ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு: பப்பி லஹரி மற்றும் ஆசாத் இசையமைக்க சேதுராமன், ராஜன் லியால்பூரி மற்றும் ஆகாஷ்தீப் பாண்டே ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.