மழைக்காலங்களில் காவிரியில் வீணாகும் நீரை சேமிக்க நடவடிக்கை 3 தடுப்பணை கட்டப்படும்

சென்னை

சென்னை, ஜூலை 15  மழைக்காலங்களில் காவிரியில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் முக்கொம்பு, கரூர், கொள்ளிடம் ஆகிய இடங்களில் 3 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணிதுறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை. காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.491 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவேரி ஆறுகர்நாடகாவில்உள்ளகுடகுமலையில்தலைக்காவிரிஎன்னும் இடத்தில்ஆரம்பித்து 320 கி.மீ துலீரத்தில்தமிழகஎல்லையில்மஞ்சகொண்டப் பள்ளி என்ற இடத்தில் வந்தடைகிறது. அதன்பின் தமிழகத்தில் 77 கி.மீ பயணித்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. தமிழ் நாட்டில் மேட்டூரிலிருந்து ஆரம்பித்து 338 கி.மீ தூரம் பயணித்து நாகை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடலில் கலக்கும் இடம் வரை கீழ்க்கண்ட கட்டமைப்புகளின் மூலம் வெள்ளஉபரிநீர் சேமிக்கப்படுகிறது.
மின்சார வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஏழுகதவணைகள் மூலம் 3.88 டி.எம்.சிதண்ணீர் சேமிக்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில்மாயனூர் கதவணையின் மூலம் 1.04 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்புக தவணையின் மூலம் 0.25 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையின் மூலம் 0.27 டி.எம்.சிதண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரைகதவணையின் மூலம் 0.83 டி.எம்.சிதண்ணீர் சேமிக்கப்படுகிறது. காவேரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மேற்கண்டகட்டமைப்புகள் மூலம் மொத்தம் 6.27 டி.எம்.சிவெள்ளமிகைநீர் சேமிக்கப்படுகிறது.

மேலும் கொள்ளிடம் ஆற்றில் நாகைமற்றும் கடலூர் மாவட்டத்திற்குஇடையேஆதனூர்­- குமாரமங்கலம் என்ற இடத்தில் கதவணைஅமைக்க ரூ.428.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் 0.32 டி.எம்.சிவெள்ளமிகைநீர் சேமிக்கப்படும். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்குஇடையேநஞ்சைபுகளூர் கிராமத்தில்காவேரியின் குறுக்கேகதவணைஅமைக்கும் பணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டு விபர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடை பெற்றுவருகிறது. இதன் மூலம் 0.5 டி.எம்.சி வெள்ள மிகை நீரை சேமிக்க இயலும்.

மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கிடையேஒரு வந்தூர் கிராமத்திலும், கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்குஇடையே முசிறி கிராமத்திலும் கதவணைஅமைக்க ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்படஉள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கிடையேதூத்தூர் – வாழ்க்கை கிராமத்திலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கிடையே கருப்பூர் – மாதிரிவேலூர் கிராமத்திலும் மற்றும் அளக்குடி கிராமத்திலும் கதவணைஅமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆக மொத்தம் ஐந்து கதவணைகள்கட்ட ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்படஉள்ளது.இதன் மூலம் 1.80 டி.எம்.சி வெள்ள மிகை நீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுஎன்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.