சந்திர கிரகணத்திலும் தடையின்றி அத்திவரதர் இன்றும் தரிசனம்

TOP-2 சென்னை தமிழ்நாடு

 

காஞ்சிபுரம், ஜூலை 16: சந்திர கிரண நாளான இன்று காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க தடை இல்லை என்பதால் வழக்கம் போல பக்தர்கள் தரிசனத்தில் ஈடுபடலாம். 16-ம் நாளாள இன்று ஆதி அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு மற்றும் கிளிப்பச்சை நிற பட்டு அணிவிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறுவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளி உள்ள அத்திவரதர் கடந்த 15 நாட்களாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவையுடன¢நடை திறக்கப்பட்டு நெய்வேத்யம், மகா தீபாராதனை செய்த பிறகு பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
16-ம் நாளாள இன்று ஆதி அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு மற்றும் கிளிப்பச்சை நிற பட்டு அணிவிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறுவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.

இன்று பௌர்ணமி என்பதால் நேற்று நள்ளிரவே வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கிழக்கு கோபுர வாசலில் காத்திருந்தனர். நடை திறக்கப்பட்டதும் கோவிந்தா கோஷத்துடன¢ அத்திவரதரை தரிசிக்க தொடங்கினர். பொது தரிசனத்தை விட சிறப்பு தரிசனத்திற்கான கூட்டம் அதிகளவில் இருந்தது.
இன்று சந்திர கிரணம் என்பதால் ஆலயங்கள் நடை மூடப்படும். ஆனால் தேவாதி தேவ ராஜாதி ராஜனான அத்திவரதருக்கு எந்த தோஷமும் இல்லை என்பதால் பக்தர்கள் இன்று இரவு 9 மணி வரை அத்திவரதரை தரிசிக்க தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முதல் இரவு 9 மணியுடன¢பக்தர்கள் அனுமதி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார். இது தவிர வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர சைக்கிளில் அழைத்து செல்வதற்கு வசதியாக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.