மிர்ப்பூர், ஜூலை 16:  வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச கிரிக்கெட் அணி, லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டார். இதனையடுத்து, புதிய பயிற்சியாளரை அந்த அணி தேடி வருகிறது.

இந்த நிலையில், அந்த அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கும் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக வங்கதேச அணிக்கு பேட்டிங் ஆலோசகராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரை, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.  பவுலிங் பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சம்பகா ரமனாயகே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.