சென்னை, ஜூலை 17: சென்னையில் குழந்தைகளின் விழித்திரை உச்சி மாநாடு கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகளின் பார்வையிழப்பினை பெரியவர்களைப்போல ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான வாய்ப் பில்லை. அதனைக்கண்டறிய வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களிடமோ உள்ளது, குழந்தைகளின் கண் பார்வை யிழப்பு என்பது பல நிலைகளிலும், தாமதமாகக் கண்டறிவதனாலும், தாமத மாக சிகிச்சை வழங்குவதாலும் மிகக் கடுமையான பார்வை குறைபாடுகளையும், சில நேரங்களில் நிரந்தரமாகவே பார்வைக் குறைபாடுடனோ அல்லது பார்வையினை இழக்க வேண்டிய நிலைக்கோ ஆளாகிறார்கள்.

குழந்தைகளின் விழித்திரை உச்சி மாநாடு 2019, சென்னை மாநகரின் மையத்தில், நுங்கம்பாக்கத்தில் உத்தமர் காந்தி சாலையில் உள்ள தாஜ் கோர மண்டல் ஹோட்டலில் ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த 2 நாட்கள் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தைவான் மற்றும் துருக்கி முதலிய நாடுகளில் இருந்து பல்வேறு விட்ரியோ ரெட்டினல் அறுவை சிகிச்சை கண் மருத்துவ வல்லுநர்கள் தங்களுடைய அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், வளர்ந்து வரும் விட்ரோ ரெட்டினல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள் மேலும் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையிலும் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த குழந்தைகளின் விழித்திரை உச்சி மாநாட்டின் மூலம் குழந்தைகளின் கண் மருத்துவத்தில் குறிப்பாக விழித்திரை கண் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையில் ஒரு நல்ல முன்னேற்றத்தினை மனித குலம் அடையும் என எதிர்பார்க்கலாம்.