புதுவை, ஜூலை 17:  புதுச்சேரி மாநில காவல்துறை புதிய டிஜிபியாக, மிசோரம் மாநில டிஜிபியாக இருந்த பாலாஜி ஸ்ரீவஸ்டாவா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபியாக இருந்த சுந்தரி நந்தா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியில் டிஜிபியாக கடந்த ஜூன் மாதம் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார்
இவர் புதுச்சேரியில் போக்குவரத்தை சீரமைப்பதில் சிறந்து விளங்கினார் சட்டம்-ஒழுங்கை கைக்குள் வைத்திருந்தார் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தார். இவருடைய பணி காலத்தில் நாட்டின் சிறந்த காவல்நிலையங்கள் வரிசையில் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4-வது இடத்தில் தேர்வு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர், திடீரென டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதுவை மாநில புதிய டிஜிபியாக பாலாஜி ஸ்ரீவஸ்டாவா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மிசோரம் மாநிலத்தின் டிஜிபியாக இருந்தவர், என்பது குறிப்பிடத்தக்கது.