வேட்டையாடிய சிங்கத்துடன் இளஞ்ஜோடி

உலகம்

பிரிட்டோரியா, ஜூலை 17: கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடி, சிங்கம் ஒன்றை வேட்டையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ‘சபாரி’ எனப்படும் காட்டுச் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன்-கார்லோன் கார்ட்டர் வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்றனர். இதில் சிங்கம் ஒன்றை வேட்டையாடிய அவர்கள் அதன் உடலுக்கு பின்னே அமர்ந்து முத்தமிடவாறு புகைப்படம் எடுத்தனர்.  இது பேஸ்புக்கில் வலம்வர உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.