பாகிஸ்தானில் ஹஃபிஸ் சையத் திடீர் கைது

உலகம்

இஸ்லாமாபாத், ஜூலை 17: மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும் ஜெய்சி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருமான ஹஃபிஸ் சையத் கைது செய்யப் பட்டு இருக்கிறார்.

லாகூரில் இருந்து குஜரிண்ட் லாலா என்ற இடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவருடைய வாகனத்தை வழிமறித்து அவரை கைது செய்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாக அவரை கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.

தேடப்படும் குற்றவாளியான ஹஃபிஸ் சையதை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்து இருப்பதை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.