சிட்னி, ஜூலை 17:  கடந்த 2015-ல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அப்போது வீரர்கள் ஓய்வறையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் சைகை செய்ததாக, ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த கெயில், இதற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு முடிவில், கெயிலுக்கு ரூ. 1.44 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கோர்ட் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து, ஆஸ்திரேலிய ஊடகம் மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில், இது குறித்த மேல்முறையீட்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம், கடந்த மூன்று வருடங்களாக போராடி இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் கிறிஸ் கெயில்.