மலேசியாவில் நட்சத்திரங்களின் கலை விழா

சென்னை

சென்னை, ஜூலை 17: மலேசியாவில் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற இருந்த சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைவிழா, செப்டம்பர் 28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் ரவிவர்மா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைவிழா மலேஷியாவில் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

தற்பொழுது இந்த விழா மேலும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் விழா நடைபெறும் தேதி செப்டம்பர் 28-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மலேசியா கோலாலம்பூரில் உள்ள பிஜிஆர்எம் டெவான் வாவாசன் சேரஸில் மாலை 5 மணிக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.