முதலிடம் பிடித்த ஜவகர் பள்ளிக்கு பரிசு கோப்பை

தமிழ்நாடு

நெய்வேலி, ஜூலை 17: நெய்வேலி புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் நெய்வேலி கிளையுடன், புத்தகக்கண்காட்சி அமைப்புக் குழு இணைந்து நடத்திய மாவட்ட அளவில் நடந்த வினாடி வினாப் போட்டியில், முதலிடம் பெற்ற நெய்வேலி, ஜவஹர் மேல்நிலைப்பள்ளிக்கு பரிசு கோப்பையை என்எல்சி இந்தியா இயக்குநர் ஆர். விக்ரமன் வழங்கினார்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் நெய்வேலி கிளையுடன், புத்தகக்கண்காட்சி அமைப்புக் குழு இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வினாடி வினாப் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம் சேர்ந்த 6 கல்வி நிலையங்கள் பங்கேற்றன.

இதற்கான இறுதி சுற்று நெய்வேலி லிக்னைட் அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளிக்கு என்எல்சி இந்தியா மனிதவளத்துறை இயக்குநர் ஆர். விக்ரமன் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா மனிதவளத்துறை இயக்குனர் ஆர். விக்ரமன், கண்காட்சி அமைப்பு குழுவின் செயலாளர் ஹேமந்த் குமார், தலைமைப் பொதுமேலாளர் ஆர். மோகன், பொதுமேலாளர் எஸ். வினாயகமூர்த்தி, பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் திருமதி. ஷெர்லி தாமஸ், துணைப் பொதுமேலாளர் குண்டுராவ் கத்ரி, மண்டல மேலாளர் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.