விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிகில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதத்துடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அடுத்த மாதத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, வரும் தீபாவளி ரிலீசுக்கு இந்த படம் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிங்களப்பெண்ணே என்ற பாடல் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் விஜய்யுடன், நயன்தாரா இணைந்து நடித்து வருகிறார். இதில் அவர் மருத்துவ மாணவியாக நடித்து உள்ளார். 2 விஜய் கேரக்டரில் அப்பா விஜய் தாதா கதாபாத்திரத்திலும், மகன் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.