சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது மற்றொரு புதிய படமான ‘எப்ஐஆர்’ படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பைசல், இப்ராஹிம், ரய்ஸ் என்பதின் சுருக்கமே ‘எப்ஐஆர்’. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய அஸ்வத் இசையமைக்கிறார். பிரசன்னா எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமான நடைபெற்று வரும் நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் தீவிரவாதி கெட்டப்பில் விஷ்ணு விஷால் காட்சி அளிக்கிறார்.