மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம் ‘சுமோ’. இந்த படத்தை எஸ். பி ஹோசிமின் இயக்கியிருக்கிறார். சிவா-பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்து வெளியான படம் ‘வணக்கம் சென்னை’ . இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இந்த படத்தின் மூலம் இணைகின்றனர் .

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “ இந்த திரைப்படம் ஒரு இந்தோ-ஜப்பானிஸ் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஜப்பானில் 35 நாட்கள் எடுக்கப்பட்டது. சுமோக்களின் வாழ்க்கையைப் படமாக்கிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவே.

இந்த படத்தின் முக்கிய அம்சமே சுமோக்கள் தான். இவைகளின் ஆயுட்காலம் 40 முதல் 45 வயது வரை தான். இந்த படத்தின் படப் பிடிப்பு ஜப்பானில் பிரமாண்டமாக நடந்தேறியுள்ளது என்றார்.
இந்தப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே எல் எடிட்டிங் செய்கிறார்.

நடிகர் மிர்ச்சி சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வி டி வி கணேஷ், யோகி பாபு நடித்துள்ளனர்.