62 இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையம்

சென்னை

சென்னை, ஜூலை 18: தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 62 இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் பேசுகையில்: கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தென்னை மற்றும் ரப்பர் விவசாயிகள் அதிகவுள்ள மாவட்டமாக உள்ளது. ஆகவே ராஜாக்கமங்கலத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழகம் முழுவதும் 62 இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை சார்பாக 34 மையங்கள் திறக்கப்பட்டு விட்டது,  கூட்டுறவு துறை சார்பில் 28 மையங்கள் 22-ம் தேதி முதல் செயல்படவுள்ளது.

தனியார் 77 முதல் 80 ரூபாய் வரைதான் கொப்பரை கொள் விலையாக தருகின்றனர். அரசு சார்பில் 95.20 ரூபாய் கொள்முதல் விலை அளிக்கப்படுகிறது. ஆகவே உறுப்பினர்கள் இதனை விவசாயிகளிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.