மும்பை, ஜூலை 18:  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் நிலையில், மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 3-ம் தேதிமுதல் செப்டம்பர் 3-ம் தேதிவரை நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், மூத்த வீரர்களுக்கு கட்டாய ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம்.

இந்த ஓய்வு பட்டியலில் விக்கெட் கீப்பர் தோனி, கேப்டன் கோலி, பவுலர் பும்ரா உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப்-சாஹல் கூட்டணியும் இணைய வாய்ப்புள்ளது.