சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்

இந்தியா

புதுடெல்லி, ஜூலை 18: முக்கியமான வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்மொழியில் முதன்முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை மக்கள் படித்து தெரிந்துகொள்ள வசதியாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியுடன், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது.

இதில், தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தின.

இதனையடுத்து, அனைத்து பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தமிழில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளது.